அமாவாசை நாளில் முன்னோரை வழிபடுங்கள்…ஐஸ்வர்யம் பெருகும்..

சென்னை: வைகாசி சுக்கிர வார அமாவாசையான வெள்ளிக்கிழமை (22.5.20) தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கி வழிபட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆன்மிகவாதிகளுக்கு வரம்தரும் மாதம் வைகாசி. அமாவாசை முன்னோருக்கான நாள். இந்நாளில் அவர்களை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும் என்பார்கள்.
நம் இந்து சாஸ்திரங்கள் மாதம்தோறும் அமாவாசையின்போது தர்ப்பணம் செய்யச் சொல்கிறது.
முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு தீப, தூப ஆராதனை காட்டி, நமஸ்கரித்து பிரார்த்தனை செய்தாலே போதும் வீட்டில் ஐஸ்வர்யம் சேரும் என்பார்கள்.
வெள்ளிக்கிழமையில் வரும் வைகாசி அமாவாசை மிக முக்கியத்துவம் மிக்கது. இந்நாளில், முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விட்டு செய்யப்படும் தர்ப்பணத்தை, தில தர்ப்பணம் என்பார்கள். அதை செய்யுங்கள்.
அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதிப்பதோடு, அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் அன்றைய நாளில் குறைந்தபட்சம் 5 பேருக்காவது உணவு அளியுங்கள். தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் என ஏதேனும் ஒரு உணவுப் பொட்டலம் வழங்கலாம். இதற்கு மனம் இருந்தால் போதும் பணம் இதற்கு தடையில்லை. உங்கள் வீட்டில் ஆரோக்கிய சூழலும், ஐஸ்வர்யமும் வந்துசேரும்.
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு…

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.