நான் வந்துட்டேன்னு சொல்லு…
ஐபோன் எஸ்இ2020 அமர்க்களம்
சென்னை: ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ 2020 விரைவில் இந்தியாவில் அதன் விற்பனையைத் தொடங்கவுள்ளது.
அத்துடன் அதன் தொடக்க விற்பனையில் ரூ.38,900 என்ற தள்ளுபடி விலையில் வாங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபோன் எஸ்இ 2020 வாங்குவோருக்கு ரூ.3,600 கேஷ்பேக்கை எச்.டி.எஃப்.சி வங்கி அறிவித்துள்ளது. இந்த கேஷ்பேக் ஆபர் காரணமாக ஐபோன் எஸ்இ 2020 – இந்த விலையை ரூ.38,900 ஆகக் குறைக்கிறது. இந்த சலுகை எச்டிஎப்சி டெபிட், கிரெடிட் கார்டுதாரர்களுக்கு கிடைக்கும்.
இதுதொடர்பான தகவலுக்கு www.indiaistore.com ஐ பார்வையிட ரெடிங்டன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஐபோன் மாடல் வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மூன்று வகையாக வருகிறது. 64 ஜிபி விலை ரூ.42,500, 128 ஜிபி விலை ரூ.47,800, 256 ஜிபி விலை ரூ.58,300).
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.3,600 கேஷ்பேக் மூலம், இதன் 64 ஜிபி மாடல் ரூ.38,900 கிடைக்கப்போகிறது.
You must log in to post a comment.