நல்லோர் கூடம் – மெய்நிகர் மன்றம் தொடக்கம்: மு.க.ஸ்டாலின்

சென்னை; தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு உதவி தேவைப்படுவோர், உதவி வழங்குவோரைத் தொடர்புகொள்ள – நல்லோர் கூடம் – எனும் மெய்நிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைவோம் வா செயல்திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பல தன்னார்வலர்களை தொடர்புகொண்டதாகவும், தேவை உள்ளோருக்கு எப்படி உதவுவது என்பதை அறிய https://ondrinaiomvaa.in//nallorkoodam/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நல்லோர் கூடம் மூலம் இணைந்த தன்னார்வலர்களுடன் காணொலி வாயிலாக உரையாடியதாகவும், அவர்களின் இரக்க சிந்தனை, பேரிடரை நாம் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.