நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி
சென்னை: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதி வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு, பாதுகாப்பு, நிவாரணம் போன்றவற்றுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், திரைப்படத் துறையினர், தொழில் துறையினர் பலரும் பிரதமர் பொது நிவாரண நிதி, முதலமைச்சர் பொது நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
திரைபபடத் தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, பிரதமர் பொது நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு ரூ.25 லட்சமும் என ரூ.1.25 கோடியை நடிகர் அஜித்குமார் வழங்கியுள்ளார்.
You must log in to post a comment.