தொல்.திருமாவளவன், இயக்குநர் ஷங்கர் பிறந்த நாள்

தொல் திருமாவளவன்: முனைவர் தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராவார். தலித்துகளின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் சார்ந்த தளங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தலித்துகளின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வரும் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 1962 ஆகஸ்ட் 17-இல் பிறந்த இவரின் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இயக்குநர் ஷங்கர்: 1963-இல் இதே நாளில் பிறந்தவர். இவருடைய படங்கள், அவற்றின் தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களாக மக்களிடையே பேசப்படுகின்றன. அவர் திரைப்பட இயக்குநராக ஆவதற்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

பிற நிகழ்வுகள்

1807 – ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூயார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.
1862 – லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலை நடத்தினர்.
1918 – போல்ஷெவிக் புரட்சியாளர் மொயிசேய் யுரீட்ஸ்கி படுகொலை செய்யபட்டார்.
1939 – த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூயார்க் நகரில் காண்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு தொடக்கம்.
1945 – இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.
1947 – இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1959 – மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைந்தது.
1960 – காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1962 – கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
1969 – மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
1970 – வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1979 – இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரேன் வான்வெளியில் மோதியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
1982 – முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
1988 – பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா உல் ஹக் மற்றும் பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
1991 – சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
1999 – துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

சிறப்பு நாள்

இந்தோனேசியா – விடுதலை நாள் (1945)
காபோன் – விடுதலை நாள் (1960)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.