தெருவிளக்கு வசதிக்கு காத்திருக்கும் குடியிருப்போர்

மதுரை: மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி சத்யாநகர் குடியிருப்போர் தெருவிளக்கு வசதிக்காக காத்திருக்கின்றனர்.

இப்பகுதியில் அதிக அளவில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 1 முதல் 6 தெருக்கள் வரை மின் கம்பங்கள் இருந்தும், தெரு மின் விளக்குகள்
அமைக்கப்படவில்லை. இதனால் , இப்பகுதியில் குடியிருப்போர் வீடுகளுக்கு செல்லும் வழி இருளில் மூழ்கியுள்ளது.

இரவில் நாய்த் தொல்லைகளும், விஷப்பூச்சிகள் நடமாட்டமும் இருப்பதால் இப்பகுதி மக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு எரியச் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.