தென்னாபிரிக்க இளைஞர் நாள்

தென்னாப்பிரிக்காவி்ல் 1976 ஜூன் 16-இல் கறுப்பினப் பள்ளி மாணவர்கள்  தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் சோவேட்டோ எழுச்சி (Soweto uprising) என அழைக்கப்படுகிறது. ஆபிரிக்க மொழியை உள்ளூர் பள்ளிகளில் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆபிரிக்கான மொழி அல்லது ஆபிரிக்கான்ஸ் (Afrikaans) என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. டச்சு மொழியில் இருந்து உருவானது. இது கீழ் பிராங்கோனிய ஜெர்மானிய மொழி வகையில் அடங்கும். இதை உள்ளூர் பள்ளிகளில் பயிற்றி மொழியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதை எதிர்த்து சோவேட்டோ நகரின் பல பள்ளிகளில் பயின்ற கறுப்பின மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 700 மாணவர்கள் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக 176 மாணவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஜூன் 16-இல் தென்னாப்பிரிக்காவில் “இளைஞர் நாள்” நடத்தப்படுகிறது

பிற நிகழ்வுகள்

1745 – பிரித்தானியர் கேப் பிரிட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
1779 – ஸ்பெயின் பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை தொடங்கியது.
1819 – குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் மாண்டனர்.
1883 – இங்கிலாந்தில் விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1897 – ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
1911 – விஸ்கொன்சின் மாநிலத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்ததில் களஞ்சியம் ஒன்று சேதமடைந்தது.
1940 – லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.
1963 – உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வாலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.
1976 – தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1964 – லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
1983 – யூரி அந்திரோப்பொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
1994 – சீன விமானம் TU-154 புறப்பட்ட 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் உயிரிழந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.