திருமலை-திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பதற்கு ஆந்திர அரசு தடை


திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகளை விற்பதற்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்துள்ளது.
பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை ஏலம் விடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த முடிவுக்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆந்திர இந்துசமய அறநிலையத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது:
பக்தர்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு நில விற்பனையை தேவஸ்தானம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். மடாதிபதிகள், பக்தர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறிந்து இதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
விற்பனை செய்ய முடிவு செய்த நிலங்களில் கோயில் கட்டலாமா, பிற விஷயங்களை மேற்கொள்ளலாமா என்பதையும் தேவஸ்தானம் பரிசீலிக்க வேண்டும். அதுவரை ஏழுமலையானின் அசையா சொத்துகளை விற்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.