திருக்குறளும், திருவள்ளுவரும்

இன்றைக்கு மத, இன, மொழி, சமூக வேறுபாடுகளைக் கடந்தும் உலகம் முழுவதும் போற்றப்படும் திருவள்ளுவரின் இயற்பெயர் என்ன என்பது தெரியாது. ஆனால் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாக அவர் திகழ்வதை யாரும் மறுக்க முடியாது.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தையோ, வரலாற்றையோ யாரும் இதுவரை போதுமான ஆதாரங்களுடன் எடுத்துரைக்கவில்லை. கடைச் சங்க காலமான கி.மு.400-க்கும் கி.மு.100-க்கும் இடையில் வாழ்ந்த மாமூலனார் என்ர புலவர், ஆரியப்படை கடந்தபாண்டிய மன்ன்ன் நெடுஞ்செழியன் ஆண்ட காலத்தில் வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஒலைச் சுவடிகள் உள்ளன.

திருவள்ளுவரின் இயற்பெயர், வாழ்ந்த இடம் குறித்து மாறுபட்ட கருத்துகள் உண்டு. எனினும் அவர் கி.மு. முதலாம் நூற்றாண்டில் இன்றைய சென்னை மாநகரில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்தாக தமிழக அரசு அறிவித்த்து.

திருவள்ளுவர் இயற்றிய ஒன்னேமுக்கால் அடிகளைக் கொண்ட குறள் பாக்களில் இருந்து அவருக்கு திருக்குறள் எனப் பெயரிட்டும், தாயாருக்கு ஆதி என்றும், தந்தைக்கு பகவன் என்றும் அடையாளம் வைத்து அழைத்து வருகிறோம்.

மறைமலை அடிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கி.மு.31-ஆம் ஆண்டில் வள்ளுவர் பிறந்ததாக அடையாளம் காட்டப்படுகிறது. 1971 முதல் தமிழ்நாடு அரசின் நாள்குறிப்பிலும், 1972- முதல் தமிழ்நாடு அரசிதழிலும், திருவள்ளுவர் ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

திருக்குறளவுக்கு முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்தான். அவர் எழுதிய மூலத்தொகுப்பை கண்டுபிடித்து 1812-இல் ஓலைச் சுவடியில் இருந்து அச்சு பதிப்புக்கு திருக்குறளை ஏற்றியவர் தஞ்சாவூரை சேர்ந்த ஞானப்பிரகாசன் என்பவர் ஆவார்.

முன்னதாக 1794-இல் திருவள்ளுவர் பற்றிய திருவள்ளுவர் கடல் திரட்டு லண்டனைச் சேர்ந்த கிண்டர்ச்லி என்பவரால் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டது. 1812-இல் அறத்துப்பாலை மட்டும் எப்.டபுள்யு எல்லீஸ் எந்பவர் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு திருக்குறள் மூலத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்பு குறிப்புடன் 304 பக்கம் கொண்ட புத்தகம் வெளியானது.

திருவள்ளுவர் அவதரித்ததாக கருதப்படும் சென்னை மயிலாப்பூரில் அவருக்கு தனிக்கோயில் உள்ளது. அவர் பிறந்ததாகக் கருதப்படும் இலுப்பை மரத்தடியில் அவரது தாய், த்தைக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வள்ளுவருக்கு உருவம் தந்தவர்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் நடந்தன. 1950-களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியை மேற்கொண்டவர் கவிஞர் பாரதிதாசன். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வனுடன் சேர்ந்து ஓவியர் வேணுகோபால் சர்மாவை சந்தித்தார். மூவரும் இணைந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க முயற்சித்தனர்.

வேணுகோபால் சர்மா, தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் அப்படத்தை வைத்தார். அதை மறைந்த காமராஜர், அண்ணா, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.

1960-இல் இப்படம் அண்ணாவால் காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பிறகு மத்திய அரசால் இப்படம் தபால் தலையாக வெளியிடப்பட்டது. 1964-இல் கமிழக சட்டப் பேரவையில் வேணுகோபால் சர்மா வரைந்த படம் அன்றைய குடியரசு துணைத் தலைவரான சாகிர் உசேனால் திறக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.