திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கைது
சென்னை: திமுக அமைப்பு செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சனிக்கிழமை அதிகாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ். பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் அவர் நீதிபதிகள் குறித்தும் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண்குமார் என்பவர் ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளித்திருந்தார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீஸர், ஆர்.எஸ். பாரதியை சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவரை ஜாமீனில் எடுப்பதற்காக திமுக வழக்குரைஞர் அணியினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தன் மீதான கைது நடவடிக்கை குறித்து கருத்து கூறிய ஆர்.எஸ்.பாரதி, கொரோனா தடுப்பு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்.15-இல் சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது. யாரையோ திருப்திப்படுத்தவேஎன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
You must log in to post a comment.