திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நீக்கம்
சென்னை: திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திமுக விவசாய அணிச் செயலர் கே.பி.ராமலிங்கம் அக்கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கே.பி. ராமலிங்கம் இருமுறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். அண்மையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியபோது, கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டது. தற்போது கே.பி. ராமலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
You must log in to post a comment.