தாதாசாகெப் பால்கே பிறந்த நாள்

-கண்ணன் சேகர்-

30.04.2020 வியாழக்கிழமை  🟢இன்று…

📌1955 ல்– இந்திய இம்பீரியல் வங்கியின் பெயரை, பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது

📌1982ல் – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது

📌1870 ல்– இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கே, பிறந்தார். தாதாசாகெப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர். தாதா சாகேப் பால்கே இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார்.

படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார். எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.
〰️〰️〰️🎂🎈🎁〰️〰️〰️

இன்றைய கவியரசர் கண்ணதாசன் பாடல்.
🎵
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்..

நிழலாடும் படம் என்றும் நீயல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

கண்ணாடித் திருமேனி அவன் தந்தது
நீ கண்வைத்துப் பாராமல் துயர் கொண்டது..

பொன்மஞ்சள் பூந்தேகம் பொன் போன்றது
அது பொலிகின்றது உனை வலம் வந்தது

என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்

இதமான இதழ் உண்டு
படம் போடவே-
தினம்

இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி

என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

படம்: சினிமாப் பைத்தியம்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.