தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ரத்து


சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அட்டவணை ரத்து செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-22-ஆம்‌ ஆண்டுக்கான நிர்வாகக்குழு மற்றும்‌ செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்‌ அட்டவணை ஏப்ரல்‌ 17-இல் வெளியிடப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில் ஏற்கெனவே அறிவித்திருந்த அட்டவணைப்படி தேர்தல்‌ நடத்த முடியாத சூழ்நிலை நீடிப்பதால்,, தேர்தல்‌ நடத்துவதற்கு கால அவகாசம்‌ வேண்டும்‌ என்று சங்க உறுப்பினர்கள்‌ சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்தனர்‌.

வழக்கை கடந்த 20-ஆம் தேதி விசாரித்த நீதிபதி சங்கத்தின் தேர்தலை நடத்த மேலும் 3 மாதகாலம் அவகாசம் அளித்து செப்டம்பர்‌ 30-க்குள்‌ ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி‌ எம்‌.ஜெயசந்திரன்‌ தலைமையில்‌ தேர்தலை‌ நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.


இந்த உத்தரவின் அடிப்படையில் ஏற்கெனவே ஏப்ரல்‌ 17-இல் ‌அறிவிக்கப்பட்ட தமிழ்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்‌ தேர்தல்‌ அட்டவணை தற்போது இந்த அறிவிப்பின்‌ மூலம்‌ ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்தல் அட்டவணை உறுப்பினர்களுக்கு கடிதம், வாட்ஸ்-அப் மூலம் பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ என்றும் தேர்தல் அதிகாரி ஜெயசந்திரன் அறிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.