தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59-ஆக உயர்வு

அரசுப் பள்ளி – கல்லூரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும்


சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59-ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவு அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59-ஆக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.