தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்
சென்னை: தமிழக அரசு, மக்களின் நலனை அலட்சியப்படுத்தி வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எவ்வித முன்தயாரிப்பும் இன்றி திடீரென 4 நாள்கள் முழு ஊரடங்கு அறிவித்தது தமிழக அரசின் முன்யோசனையற்ற ஆட்சி நிர்வாகத்தை காட்டியது.
அரசு உருவாக்கிய பதற்றத்தில் மக்கள் கூட்டமாக வெளியே வந்து இத்தனை நாள்கள் கடைப்பிடித்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.
முறையாக ஆலோசித்து முன்பே வெளிப்படையாக அறிவித்திருந்தால், மக்கள் பதற்றமின்றி சமூக ஒழுங்கை கடைப்பிடித்து பொருள்களை பொறுமையாக வாங்கிச் சென்றிருப்பர்.
கொரோனா தடுப்பில் முன்கள வீரர்களுக்கான பாதுகாப்பில் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசு, மக்களின் நலனையும் அலட்சியப்படுத்தி, மூன்றாம் நிலைக்குத்தள்ளி வருகிறது. விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
You must log in to post a comment.