தமிழகத்துக்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு
புதுதில்லி: மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் தமிழகத்துக்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுதில்லியில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, மே மாதத்துக்கு ரூ. 46,038 கோடி நிதி பகிர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு 1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிஒதுக்கீட்டில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ. 8,255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
You must log in to post a comment.