தமிழகத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு

பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் ௐௐஎண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 பெண்களும், 39 ஆண்களும் அடங்கும். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 29,056 பேரும், அரசு கண்காணிப்பில் 26 பேரும் உள்ளனர்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 42 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது வரை 1020 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
குணமடைந்தவர்கள் சதவீதம் 54.11 ஆகவும், உயிரிழப்பு 1.27 சதவீதமாகவும் உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.