தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
சென்னை: இம்மாதம் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ள உள்துரை அமைச்சகத்தின் உத்தரவு தமிழகத்தில் செயல்படுத்துவது என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்த வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இருக்காது. ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
You must log in to post a comment.