தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
அதுமுதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. அத்துடன் அம்பன் புயல் காரணமாக ஈரப்பதமும் முற்றிலும் காணாமல் போனது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில தினங்களாக அனல் காற்று வீசுகிறது. அக்னி நட்சத்திரம் வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால், அதன் பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இருப்பினும், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, ராணிப்பேட்டை, திருத்தணி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். அதனால், பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
You must log in to post a comment.