தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து தனது எதிர்ப்பை வியாழக்கிழமை காலை பதிவு செய்தார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புச் சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்துகின்றன. அத்துடன் திமுகவினர் அவரவர் இல்ல வாயிலில் கருப்புச் சின்னம் அணிந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேடடையில் உள்ள இல்ல வாயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களுடன் நின்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.