தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு மதிப்பு கூட்டு வரி உயர்வு


சென்னை:
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3.25-ம், டீசல் விலை ரூ.2.50-ம் உயரும்.
கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு உத்தரவு பெரிய அளவில் வருவாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.