தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை புதிதாக 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அதிக அளவாக 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6,282-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்து உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.