தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்று்க்கிழமை மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு நோய்த் தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. தொடர்ந்து மத்திய அரசு வழிகாட்டுதலில் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில காவல்துறையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, தேவையின்றி நடமாடுவோர் மீது வழக்கும் பதிவு செய்து வருகிறது.
இடையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்பட்டபோது ஏற்பட்ட மக்கள் நடமாட்டம் காரணமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 3,023 பேர் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12 மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. மாவட்டவாரியாக விவரம்:
சென்னை – 203
விழுப்புரம் – 33
கடலூர் – 9
கள்ளக்குறிச்சி – 6
*கோவை – 4
அரியலூர், மதுரை, தென்காசி, திருவள்ளூர் – தலா 2
செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை – தலா 1
You must log in to post a comment.