தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு


சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் சனிக்கிழமை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டல பகுதிகளை தவிர பிற இடங்களில் இக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான தடைகள் விலகியது அடுத்து டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
மதுபானக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இயங்கும். நாளொன்றுக்கு ஒரு கடைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.