தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்குகிறது…

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 716 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8,718-ஆக உயர்ந்துள்ளது.

தமிவக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையில் மட்டும் 510 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 8,002-இல் இருந்து 8,718-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,134 பேர் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.