தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைக் கடந்தது
சென்னை:தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது. அத்துடன் நாடளவில் அதிகமாக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் 4 இடத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நாட்டிலேயே கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் மிகக் குறைவாக இருந்தது. தற்போது அதன் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் ஏராளமானோருக்கு நோய்த் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 771 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை 580 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு அதிக எண்ணிக்கையில் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்படுவதே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இது வரும் வாரங்களில் மெல்ல குறையத் தொடங்கும் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை நோய்த் தொற்றுக்கு ஆளான 580 பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 316 பேர். அதையடுத்து சென்னையில் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,644- ஆக உயர்ந்துல்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு 37-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1547 ஆக உள்ளது. 3,822 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
You must log in to post a comment.