தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 911-ஆக உயர்வு

தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் தனிமைப்பபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள்தான் இப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவலை தமிழக தலைமைச் செயலர் சண்முகம் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஏற்கெனவே தனிமைப்படுத்தி கண்காணிப்பட்டு வருவோரில் 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 5 பேரும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் 72 பேரும் ஆவர். இதுவரை தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் 9 பேர் இறந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் பாதிப்பைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக அத்தியாவசியத் தேவைகள் தொடர்பாக அவ்வப்போது முதல்வர் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மாநில அரசு 12 குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது. அக்குழுவினர் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் அடங்கிய குழுவினரின் கருத்துக்களை முதல்வர் கேட்டறிந்துள்ளார். நோயை கட்டுக்குள் வைக்க வேண்டுமெனில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பாரத பிரதமர் நடத்தும் காணொலி காட்சியில் தமிழக முதல்வர் சனிக்கிழமை பங்கேற்கவிருக்கிறார். அதையடுத்து ஊரடங்ககை நீட்டிப்பது குறித்த முடிவை முதல்வர் எடுப்பார்.

தனிமைப்பபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குட்பட்ட கரோனா பாதிப்பு உள்ளது. அதில்தான் கூடுதல் எண்ணிக்கையில் கரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த தொடர்பு வெளியே போகாத அளவில் கட்டுப்படுத்தப்பட்டால் வைரஸின் தாக்கத்தை சமுதாயத் தொற்றாக மாறமாமல் தடுத்துவிட முடியும்.

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் குடும்பங்கள் பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கெனவே முதல்வர் அறிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.