தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,128-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. பாதிப்பு குறைவான இடங்களில் ஒருசில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதித்தோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இதுவரை 7,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதித்துள்ளோர் எண்ணிக்கை 14,753-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியோர் தவிர மற்றவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


வெள்ளிக்கிழமை புதிதாக 786 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 569 பேர். அதேபோல் ஒரே நாளில் அதிக அளவாக தமிழத்தில் 846 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 98-ஆக உயர்ந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.