தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,895-ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறி்க்கை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 688 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448-ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 46 பேர். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 489 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதையடுத்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,895-ஆக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 3 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 81-ஆக அதிகரித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.