தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று 771 பேருக்கு உறுதி


சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 771 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் வேகம் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 24-இல் 54-ஆக இருந்த நிலையில் மெல்ல அதிகரித்து அதிகபட்சமாக புதன்கிழமை ஒரே நாளில் 771 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் சென்னையச் சேர்ந்தவர்கள் 324 பேர், அரியலூரை சேர்ந்தவர்கள் 188 பேர் ஆவர். தமிழகத்தில் சிகிச்சையில் இருப்போர் 3,275, குணமடைந்தோர் 1,516, உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக உள்ளது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. தற்போது பரிசோதனை ஆ்ய்வகங்கள் எண்ணிக்கையும், அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் ஆய்வு செய்யப்படுவதாலும் தொற்று எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.