தமிழகத்தின் உள்புற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 48 மணிநேரத்திற்கு மதுரை, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது 27-ஆம் தேதி வரை இது நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
வெயில் சுட்டெரிக்கும்
மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திருத்தணியில் அதிகபட்சமான வெப்பநிலையும் காணப்படும். பொதுமக்கள் முற்பகல் 11.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வெளியில் தேவையின்றி வர வேண்டாம்.
சென்னையில் காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும், அதிகபட்சமாக 35 டிகிரியாகவும் இருக்கும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.