டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு


சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியப் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அத்துடன் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.