டாஸ்மாக் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நிலையில், அவற்றின் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 8-ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மட்டுமே மீண்டும் இன்று முதல் செயல்படலாம்.
பிற கடைகள் மாவட்ட மேலாளர்கள் உத்தரவு பெற்ற பின்னரே திறக்கப்பட வேண்டும்.
கடை மேற்பார்வையாளர்கள் போதிய இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு, நேரம் குறிப்பிட்ட 70 டோக்கன்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.
தடுப்புவேலிகள், ஒலிபெருக்கி அவசியம் இருக்க வேண்டும். பணியாளர் அனைவரும் கையுறை, முகக் கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.
வயது முறையில் டோக்கன் வழங்குவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலம் விற்பனை விவரத்தை மாலை 7 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். அத்துடன் (பணியாளர் ) இளநிலை உதவியாளருக்கு தொலைப்பேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You must log in to post a comment.