ஜோதிபாசு பிறந்த நாள்
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோதி பாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சியைச் (மார்க்சியம்) சேர்ந்த மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர். 1977 முதல் 2000-ஆவது ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராக பணியாற்றி நாட்டின் நெடுநாள் முதல்வராக இருந்த பெருமையைப் பெற்றவர். தனது கட்சியின் பொலிட்பீரோவில் 1964 முதல் 2008 வரை உறுப்பினராக இருந்த பெருமையும் அவருக்கு உண்டு.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலிவால் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 2010 ஜனவரி 17-இல் காலமானார்.
பிற நிகழ்வுகள்
1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.
1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
1709 – ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் மன்னனைத் தோற்கடித்தார்.
1815 – பதினெட்டாம் லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனார். இரு வாரங்களே பதவியில் இருந்த 4 வயது சிறுவனான இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.
1859 – சுவீடன்-நார்வே மன்னராக சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ் முடி சூடினார்.
1889 – வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் முதலாவது இதழ் வெளியானது.
1892 – நியூபவுன்லாந்தின் சென் ஜான்ஸ் நகரில் இடம்பெற்ற பெரும் தீ விபத்து நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1914 – மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த ஜோதி பாசு பிறந்த நாள்
1982 – ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார்.
1990 – ஜெர்மனி அர்ஜென்டீனாவை வென்று 1990 கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் கொலையுண்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.
2006 – மபொசி புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
You must log in to post a comment.