ஜெர்மனியில் மீண்டும் திறக்கப்பட்ட முடிதிருத்தும் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள்
ஜெர்மனி: ஜெர்மனியில் மீண்டும் திறக்கப்பட்ட முடிதிருத்தும் நிலையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை அடுத்து தனிமைப்படுத்தல் விதிகளை கடுமையாக பின்பற்றிய ஜெர்மனி அண்மையில் அதை தளர்த்தியுள்ளது.
ஜெர்மன் பொருளாதார மற்றும் சமூக நல விவகாரங்கள் அமைச்சகங்கள் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதியளித்த நிலையில் இதற்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளன.
முடிதிருத்தும் நிலையங்களில் காத்திருப்பு பகுதி, பத்திரிகைகள் படிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரும், முடி திருத்துபவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளரின் தலைமுடியைக் கழுவுவதற்கு முன்பு கையுறைகளை கழற்றக் கூடாது. ஆனால் முடி வெட்டும்போது அகற்றலாம்.
முடிவெட்டுவோரும், வாடிக்கையாளரும் நேருக்கு நேர் பார்த்து பேசக் கூடாது. எதை சொல்வதாக இருந்தாலும் கண்ணாடியை பார்த்தபடிதான் பேச வேண்டும்.
மற்ற இடங்களைக் காட்டிலும் முடிதிருத்தும் நிலையங்களில் நெருக்கம் அதிகம் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
6 வார ஊரடங்கு காலத்தில் பலரும் தாங்களாகவே முடி வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். தலைக்கு சாயம் பூசிக் கொண்டிருக்கின்றனர். இப்போது அதை சீர்செய்வதுதான் எங்கள் பணியாக உள்ளது என்கின்றனர் முடிதிருத்துவோர்.
You must log in to post a comment.