ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து இல்லை

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ஆம் கட்டமாக கடந்த 1-ஆம் தேதி முதல் வரும் 31 வரை ஊரடங்கு தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜூலை 31 வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இருக்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.