ஜூலை 1-இல் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்


புதுடில்லி: ஜூலை 1-ஆம் தேதி சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது என்று மனிதவள மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் அச்சம் காரணமாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இத்தேர்வை ஜூலையில் நடத்தப்போவதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பான அட்டவணை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 10.30 முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளன.
தேர்வின்போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு வருவோர் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.