ஜூன் மாத ரேஷன் பொருள்களுக்கான டோக்கன் மே 29 முதல் வழங்கப்படும்-முதல்வர்
சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கான ஜூன் மாத ரேஷன் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வரும் 29 முதல் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என முதல்வர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் மே 31 வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இச்சூழலில் ஜூன் மாதத்துக்கு வழங்க வேண்டிய விலையில்லா ரேஷன் பொருள்களுக்கான டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்ந்து 29, 30, 31 ஆகிய 3 நாள்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்கப்படும். அதில், பொருள் வழங்கப்படும் நேரம் மற்றும் நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த டோக்கனை கொண்டு ஜூன் 1 முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி கொள்ளலாம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொருள்கள் வாங்கச் செல்லும்போது ஸ்மார்ட் கார்டு, டோக்கன் ஆகியவற்றை வாகனச் சோதனையின்போது காட்ட வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
You must log in to post a comment.