ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த நாள்

ஜார்ஜ் பெர்னாட் ஷா  ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியர். இசை மற்றும் இலக்கிய விமர்சனங்கள் மூலம் அவரது எழுத்துத் திறமை பலரை உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை படைத்தார்.  அவரது பிரதான திறமை நாடகம் மூலம் வெளிப்பட்டது.  60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாக அமைந்திருந்தது. அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.

உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை உணர்ந்து அவர் மிகுந்த கோபம் கொண்டார். மேலும் அவரது பெரும்பாலான படைப்புகள் அந்த உழைப்புச் சுரண்டலைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்தன. ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா பல சிற்றேடுகளை எழுதி சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். விரைவில் அதற்குக் காரணமாக விளங்கும் ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார்.

பெர்னாட் ஷா,  பெண் சமூக சீர்திருத்தவாதி சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட்டை திருமணம் செய்துகொண்டார்.  அவர்கள் ஷா’ஸ் கார்னர் (Shaw’s Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட். லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர். கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் அவருடைய உடல்நிலையை மோசமடையச் செய்தது. அதைத் தொடர்ந்து பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் காலமானார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே என்ற பெருமைக்குரியவர்.

சிறப்பு நாள்

மாலைதீவு – விடுதலை நாள் (1965)
லைபீரியா – விடுதலை நாள் (1847)
கார்கில் போர் வெற்றி நாள் (இந்தியா)

பிற நிகழ்வுகள்

657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர்.
811 – பைசண்டை பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார்.
1509 – விஜயநகரப் பேரரசின் மன்னராக கிருஷ்ண தேவராயர் முடிசூடினார்.
1788 – நியூயார்க் ஐக்கிய அமெரிக்காவின் 11-ஆவது மாநிலமாக இணைந்தது.

1847 – லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1891 – தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.
1936 – அச்சு நாடுகள் ஐப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ராணுவம் உக்ரைனின் லிவீவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் ஆகிவற்றுக்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.
1945 – ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.
1945 – ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.
1952 – எகிப்தில் நிகழ்ந்த ராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.
1953 – கியூபா புரட்சி: கியூபாவில் மொன்காடா ராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1956 – அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.

1856 – எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த நாள் (இறப்பு 1950)
1957 – குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.
1958 – எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.
1963 – மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 – மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
1971 – அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.
1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
1994 – எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.