ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், அனந்த்நாக் பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர்.

இந்நிலையில், அனந்த்ராக் மாவட்டத்தில் உள்ள குல்க்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் தங்கியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினருடன் ஜம்மு-காஷ்மீர் போலீஸாரும் இணைந்து ஈடுபட்டனர். உயிரிழந்தோர் விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.