ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்?

டோக்கியோ: ஜப்பானில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை வரை 74,654 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,906-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 92 பேர் உயிரிழப்பை சந்தித்துள்ளனர். கொரோனா பரவலின் தீவிரத்தை அடுத்து ஜப்பானில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே கூறுகையில், ஏப்ரல் 7 முதல் ஜப்பானில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்துள்ளேன். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல் இங்கு ஊரடங்கு கடுமை காட்டப்படாது. ஊரடங்கு காலத்திலும், மாகாண எல்லைகள் திறந்திருக்கும். மே 6 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.