சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களில் மறு உத்தரவு வரும் வரை 3 வேளைகளும் இலவச உணவு வியாழக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இதுகுறித்துசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களில் வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்க வேண்டும். இலவச உணவு வழங்குவற்கான செலவை இலவச உணவு வழங்க கோரிய தன்னார்வலர்களிடம், அம்மா உணவகத்தில் பணிபுரியும் சுய உதவி குழுக்கள் பெற்று, வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.