சென்னையில் வெயில் கொளுத்தியது


சென்னை: சென்னையில் புதன்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
அம்பன் புயல் மொத்த ஈரப்பதத்தையும் இழுத்துக்கொள்ளும். இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தது.
அதற்கேற்ப செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. புதன்கிழமை பிற்பகலில் செவ்வாய்க்கிழமையைக் காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரியாகவும் இருக்கும். சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 41.4 டிகிரி வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பிற்பகல் 12.30 மணி அறிக்கை தெரிவிக்கிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.