சென்னையில் மேலும் 4 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று


சென்னை:ஏற்கெனவே தனியார் தொலைக்காட்சி செய்தி சேனலைச் சேர்ந்த 26 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நிலையில், மேலும் 4 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 3 பேர் ஒரே தமிழ் தொலைக்காட்சி செய்தி சேனலில் பணிபுரிகின்றனர். மற்றொருவர் மற்றொரு சேனலில் பணிபுரிபவர் எனத் தெரிகிறது.
ஒரு தமிழ் செய்தித்தாள் நிருபருக்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் பத்திரிகையாளருக்கும் கொரானா தொற்று உறுதியான நிலையில், சென்னை முழுவதும் பல பத்திரிகையாளர்கள் தாமாக சோதனைக்கு முன்வந்தனர். இரண்டு நாள்களில் ஓமந்தூரார் பிரத்யேக நோய் சிகிச்சை மருத்துவமனையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மொத்த 400 மாதிரிகளில் (பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் உட்பட) ஐந்து முடிவுகள் பாஸிட்டிவாக வந்துள்ளன. அவற்றில் 4 ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட தொற்று எனத் தெரியவருகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.