சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை

அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் தற்போது 7,707 மாதிரிகளை பரிசோதிக்கும் அளவுக்கு வசதி உள்ளது. சென்னையை சுற்றிலும் அதிக மக்கள் இருப்பதாக பாதிப்பும் உயர்ந்துள்ளது. இருப்பினும் அதை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகளவில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 41-ஆக உயர்ந்துள்ளன. சென்னை, கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 முதுநிலை மருத்துவ மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 4 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், விருதுநகர், பெரம்பலூரில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.