சென்னையில் அதிகரிக்கும் கொரோனா

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்க சென்று திரும்பிய 11 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை தொடர்ந்து சென்னை மாநகரம் சந்தித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிபடுத்தி வரும் நிலையில், கோயம்பேடு சந்தைக்கு சென்று வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கோயம்பேட்டில் உள்ள வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் உள்பட 59 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. அத்துடன் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வந்து சென்றவர்கள் உள்பட 119 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் 5 வியாபாரிகளுககும், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்த சென்னை அசோகர் நகரைச் சேர்ந்த 11 பேருக்கும் தற்போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.