சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன்


சென்னை: சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிகாரிக்குக் கீழ் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டலத்துக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்துக்கு ஆபாஷ்குமார், தெற்கு மண்டலத்துக்கு அமரேஷ் பூஜாரி, மேற்கு மண்டலத்துக்கு அபய்குமார் சிங் ஆகியோர் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வர்.
டிஐஜி புவனேஷ்வரி புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.