செனான் தனிமம் கண்டறியப்பட்ட நாள்

வேதித் தனிமம்  என்பது அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களைப் பெற்றிருக்கும் ஒரே வகையான அணுக்களைக் குறிக்கும். இதுவரை 118 தனிமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 94 தனிமங்கள் இயற்கையில் தோன்றியவை. மீதியுள்ள 24 தனிமங்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை. 80 தனிமங்கள் குறைந்தபட்சமாக ஒரு ஐசோடோப்பையாவது பெற்றுள்ளன. 38 தனிமங்களின் உட்கருக்கள் கதிரியக்க உட்கருக்களாக அமைந்துள்ளன.

ஆக்சிஜன், இரும்பு, கந்தகம், பாஸ்பரஸ், தங்கம், பாதரசரம், யுரேனியம் போன்றவை தனிமங்களே. புவியில் ஆக்சிஜன் தனிமம் எங்கும் நிறைந்திருக்கும் ஒரு தனிமம். நிறை அடிப்படையில் இரும்பு என்ற தனிமம் அதிகம் காணப்படும் தனிமமாக உள்ளது.

செனான் (Xenon) என்பது Xe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம். புவியின் வளிமண்டலத்தில் செனான் வாயு நிறமற்றதாகவும் அடர்த்தி மிகுந்ததாகவும் நெடியற்ற மந்த வாயுவாகவும் ஒரு சிறிய அளவில் காணப்படுகிறது,

செனான் ஒரு மந்த வாயுவாகக் காணப்பட்டாலும் சில வேதிவினைகளில் பங்கு கொள்கிறது. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட மந்த வாயுச்சேர்மமாகும். இவ்வாயுவை மின்கலன் விளக்காகவும், ஒளிவட்ட விளக்காகவும், ஒரு மயக்க மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கிரிபட்டி 1979).
விடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1975).

பிற நிகழ்வுகள்

1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1690 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றன.
1691 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் படைகள் அயர்லாந்தில் ஓகிரிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றன.
1799 – ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தார்.
1806 – 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1892 – மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1918 – ஜப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – நார்வே வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1975 – சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1993 – ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14-இல் முடிவுக்கு வந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.