சுவையான முப்பருப்பு பாயசம்

தேவையான பொருள்கள்:

கடலைப்பருப்பு – அரை கப்,
பாசிப்பருப்பு – அரை கப்,
பாதாம்பருப்பு – கால் கப்,
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் – தலா சிறிதளவு,
குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை:

கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரித்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும், பிறகு அதை பாலுடன் சேர்த்து நன்கு கொதித்து வெந்தவுடன் பருப்பையும் சேர்த்து சர்க்கரையைப் போட்டு கொதிக்கவிடவும்.

குங்குமப்பூவை கரைத்து அதில் போட்டு. முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப்போட்டு பொடித்த ஏலத்தையும் போட்டு இறக்கினால் முப்பருப்பு பாயசம் ரெடி.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.