சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்

சுவாமி விவேகானந்தர் 19-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சி அடைய வைத்தன. இவர் இந்தியாவிலும், மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சமய சொற்பொழிவுகளை ஆற்றியவர். அவர் 1893-ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்ச்சிய சொற்பொழிவுகள் உலகப் புகழ் பெற்றது.

பிற நிகழ்வுகள்

1054 – சுப்பர்நோவா ஒன்று சீனர்களாலும், அரபுக்களாலும் கண்டறியப்பட்டது. எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா ஒன்று சீன, அரேபியர்களால் the விண்மீன் Zeta டார்சு விண்மீன் கூட்டத்தில் சேட்டா விண்மீனுக்கு அருகில் கண்டறியப்பட்டது.
1187 – சிலுவைப் போர்: சலாகுத்தீன் யெருசலம் நாட்டு மன்னர் லூசிக்னனின் கை எனபவரை வென்றார்.
1634 – நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது. இது பின்னர் கியூபெக் நகரமானது.
1636 – பிராவிடென்ஸ், ரோட் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1776 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.
1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
1810 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாம் நகரைப் பிடித்தனர்.
1826 – அமெரிக்காவின் 3-ஆவது அரசுத்தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன், 2-ஆம் அரசுத் தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார்.
1827 – நியூயார் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1837 – உலகின் முதலாவது அதி-தூர ரயில் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
1865 – ஆலிஸின் அற்புத உலகம் வெளியிடப்பட்டது.
1879 – ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1886 – சுதந்திரச் சிலையை பிரெஞ்சு மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தார்கள்.
1918 – ரஷ்யாவின் சார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்ஷெவிக்கினரால் கொல்லப்பட்டனர்.

1941 – நாசி ஜெர்மனியினரால் போலந்தில் “லூவோவ்” என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
1976 – என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.
1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.
1997 – நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பியது.
2006 – டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.